தற்போதைய செய்திகள்

மதுரையில்  மோசடி புகாரில் திமுக முன்னாள் மாவட்டச்செயலர் கைது

கிரானைட் கற்கள் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக எழுந்த புகாரில் மதுரை திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் மாவட்டச்செயலருமான வ.வேலுச்சாமி சனிக்கிழமையன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெயப்பாண்டி

கிரானைட் கற்கள் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றியதாக எழுந்த புகாரில் மதுரை திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் மாவட்டச்செயலருமான வ.வேலுச்சாமி சனிக்கிழமையன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

   மதுரை அண்ணாநகர் பகுதியில் குடியிருப்பவர் வ.வேலுச்சாமி. இவர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், திமுக முன்னாள் மாநகர் மாவட்டச் செயலராகவும், பிற்பட்டோர் நலவாரிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

   இவரது மனைவி ராஜாத்தி பெயரில் மதுரை வடக்கு தாலுகா உறங்கான்பட்டியில் குமார் கிரானைட் எனும் பெயரில் குவாரி உள்ளது. விதிமுறை மீறி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாக ஏற்கெனவே இக்குவாரி மீது புகார்கள் அடிப்படையில் யா.ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

  இந்தநிலையில் கடந்த 2007-ல் சென்னையைச் சேர்ந்த கிரானைட் கற்கள் ஏற்றுமதி நிறுவன அதிபர் கெüதம்குமார் ரெட்டி வேலுச்சாமி நிறுவனத்தில் கற்கள் வாங்குவதற்காக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். ரூ.15 மற்றும் இரு தடவை ரூ.5 என பணத்தை அவர் அளித்துள்ளார்.

  ஆனால், நீண்ட காலமாகியும் கிரானைட் கற்களை கெüதம்ரெட்டிக்கு மதுரையிலிருந்து வேலுச்சாமி அனுப்பவில்லை. 

 இதையடுத்து பணத்தை திரும்ப கொதம்குமார் ரெட்டி கேட்டுள்ளார். அப்போது ரூ.5 லட்சத்தை மட்டுமே வேலுச்சாமி தரப்பினர் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதி ரூ.25 லட்சத்தை தரவில்லையாம். பணத்தை பல தடவை கேட்டும் வேலுச்சாமி தராமல் மிரட்டல் தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

  இதையடுத்து கெüதம்குமார் ரெட்டி மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார். கண்காணிப்பாளர் உத்தரவின்படி மாவட்ட ஊரக குற்றப்பிரிவு போலீஸாகர் விசாரித்து வேலுச்சாமி, அவரது மனைவி ராஜாத்தி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்துள்ளனர்.  அதன்படி வேலுச்சாமி கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT